ஐரோப்பா

டோன்பாஸ் பகுதியை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுக்க முடியாது – ட்ரம்ப் திட்டவட்டம்

உக்ரைனின் கிழக்கு டோன்பாஸ் வட்டாரத்தை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுப்பது குறித்து எந்தவிதமான கலந்துரையாடலையும் தாம் நடத்தவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்த பிறகு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

டோன்பாஸ் பிராந்தியம் தற்போது உள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர்க்களத்தில் முன்னேறாமல் இருதரப்புத் துருப்பினரும் நாட்டுக்கு திரும்பும்படி ட்ரம்ப் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, ரஷ்யாவைச் சமாதானப்படுத்த வேண்டாம் என நட்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீது அமெரிக்கா கடுமையான நெருக்குதல் அளிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டோன்பாஸ் பிராந்தியத்தின் சுமார் 78 சதவீதப் பகுதிகள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்