செக் குடியரசிடம் இருந்து இலங்கைக்கு குரங்குகள் மற்றும் பறவைகள் நன்கொடை
செக் குடியரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மூன்று “ஈமு” பறவைகளும் நான்கு “ரிங் டெயில் லெமூர்” குரங்குகளும் நேற்று இரவு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அவைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இந்த 4 மாத வயதுடைய “ஈமு” பறவைகள் அவுஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத பறவைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளன.
ரிங்-டெயில் லெமூர் என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அழிந்துவரும் இனமாகும்.
இரண்டு வயதுடைய இரண்டு ஆண் லெமூர் குரங்குகளும், 11 வயதுடைய இரண்டு பெண் லெமூர் குரங்குகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவைகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பின்னவல வகொல்ல மிருகக்காட்சிசாலையில் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அதே மிருகக்காட்சிசாலையில் பொது கண்காட்சிக்காக அவை வழங்கப்படவுள்ளன.
(Visited 3 times, 1 visits today)