வட அமெரிக்கா

ஹேக்கர்கள் செய்த வேலையால் அதிர்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்…!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது மகன் டான் ட்ரம்பின் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

“எனது தந்தை டொனால்ட் ட்ரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2024ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது மகன் கூறுவதுபோல வேதனையுடன் அந்த தகவல் இருந்ததால் பலர் நம்பிவிட்டனர்.

இந்த தகவலை பார்த்த டொனால்ட் ட்ரம்ப், அது போலி செய்தி என குறிப்பிட்டார். டான் ட்ரம்பின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ட்ரம்பின் செய்தி தொடர்பாளரும் தெரிவித்தார்.

எனினும் டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டதாக வெளியான இந்த போலி செய்தி வேகமாக பரவி வைரலானது. சிறிது நேரத்தில் அந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content