எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட முடியாதென கூறிய டொனால்ட் டிரம்ப்

கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் பேசிய அவர், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது எலான் மஸ்க் இடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாக கூறினார்.
பத்திரிகை கட்டுரையை மேற்கோள் காட்டி, எலான் மஸ்க் வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதன் போது, தனக்கு தெரியாது, தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)