செய்தி வட அமெரிக்கா

படுகொலை முயற்சிக்குப் பிறகு மீண்டும் பிரச்சாரத்திற்குத் வந்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

முதல் முறை நடந்த கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதைகாயப்படுத்தியது. அப்போது நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டினார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது. அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மேலும், துப்பாக்கி சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இரண்டாவது முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி