வட அமெரிக்கா

பைபிள் விற்பனை மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டொலர் (ரூ.8.4 கோடி) ஆகும். அதேபோல், பைபிள் விற்பனை மூலம் 3 லட்சம் டொலர் (ரூ.2.5 கோடி) வருவாய் ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள டிரம்ப்,தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் ‘காட் பிளஸ் த யுஎஸ்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ள பைபிளை விற்பனை செய்துவருகிறார். இந்த பைபிளின் விலை 60 டொலர் (ரூ.5,000) ஆகும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content