உலகம் செய்தி

வெனிசுவேலாவின் ‘தற்காலிக ஜனாதிபதி’ ஆனார்  ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை வெனிசுவேலாவின் “தற்காலிக ஜனாதிபதி” (Acting President of Venezuela) எனக் குறிப்பிட்டு விக்கிப்பீடியா பக்கத்தின் புகைப்படம் ஒன்றைத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் அமெரிக்கப் படைகள் நடத்திய ‘Operation Absolute Resolve’ தாக்குதலில் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி தற்போது நியூயோர்க்கில் போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெனிசுவேலாவில் முறையான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்நாட்டை அமெரிக்காவே வழிநடத்தும் என்றும், எண்ணெய் உற்பத்தியை அமெரிக்காவே சீரமைக்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்ற புதிய ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், அது இரு நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!