இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்காவின் முக்கிய உயர் அதிகாரி
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மே 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பின்னர் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, அவரது பயணம் ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும்.
இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை வரவுள்ள டொனால்ட் லூ அவர்கள், அரசியல் பிரதிநிதிகள் பலரையும் சந்திக்கவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பலப்படுத்தப்படும்.
அத்துடன், இந்த கலந்துரையாடல்களில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் சுதந்திரமான ஜனநாயக சமூகத்திற்கு அவசியமான பலமான சிவில் சமூகத்தின் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்படும்.