ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலை செய்யப்படவுள்ள டால்பின்கள்

ஆஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் சிக்கிய டால்பின்கள் கருணைக் கொலை செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரை மணலில் சிக்கிய ஏராளமான டால்பின்களை மோசமான வானிலை காரணமாக மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவை கருணைக்கொலை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கில்லர் திமிங்கலம் போல் இருக்கும் இந்த டால்பின்கள், டாஸ்மேனியா தலைநகர் ஹோபார்ட்டில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்தர் நதி முகத்துவாரம் அருகே அதிக எண்ணிக்கையில் கரை ஒதுங்கின.
மீட்புக் குழுவினரும் விலங்கு நல ஆர்வலர்களும் அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருந்ததாலும், டால்பின்களை கடலுக்குள் செலுத்தும் முயற்சிகள் பலன் அளிக்காததாலும் ஏராளமான டால்பின்கள் உயிரிழந்தன.
(Visited 3 times, 3 visits today)