ஜப்பானில் நெஞ்சு வலியால் துடித்த நபரை காப்பாற்றிய நாய் – குவியும் பாராட்டு
ஜப்பானில் நெஞ்சு வலி வந்த நபரை காப்பாற்றிய நாய்க்குப் பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது.
Koume என்ற 5 வயதுப் பெண் நாய்க்கு உள்ளூர்த் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தி, சான்றிதழ் அளித்து கௌரவித்தனர்.
அந்த நாய் சிபா (Chiba) நகரில் உள்ள குதிரைச் சவாரி மன்றத்தைச் சேர்ந்தது. சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடந்தது. மன்றத்தில் 50 வயதைத் தாண்டிய ஆடவர் ஒருவர் நிலைகுலைந்து விழுந்தார்.
அவருக்கு அருகில் இருந்த கௌமே, விடாமல் குரைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் குரைக்கும் சத்தம் கேட்டுப் பலரும் கூடியதுடன் அவரை காப்பாற்றப்பட்டார்.
கௌமே பொதுவாக அவ்வளவு குரைக்காது; அமைதியாகவே இருக்கும்; அதனால் அது குரைத்தது தங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது என்றார் மன்றத்தின் குதிரைச் சவாரிப் பயிற்றுவிப்பாளர்.
நபரை காப்பாற்றிய நாயையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த மன்றத்தின் அதிகாரிகளையும் தீயணைப்புத் துறை பாராட்டியது.
தப்பி ஓடும் குதிரைகள், ஆபத்து நேரும் தருணங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க கௌமே போன்ற பெண் நாய்களைத் தொடர்ந்து வைத்துப் பராமரிப்பதாய் மன்றம் சொன்னது.