ஹமாஸில் தாக்குதலின் போது மாயமான நாய் – 18 மாதங்களுக்குப் பின் மீட்ட உரிமையாளர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது மாயமான வளர்ப்பு நாய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியபோது மாயமான வளர்ப்பு நாயை 18 மாதங்களுக்குப் பின் காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் மீட்டுவந்துள்ளனர்.
காசாவின் ரஃபா பகுதியில் முகாமிட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர், கேட்பாரின்றி திரிந்த நாயை ஹீப்ரூ மொழியில் கொஞ்சியபோது அதனை அது புரிந்துகொண்டு அவரையே சுற்றிசுற்றி வந்துள்ளது.
நாயின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்பை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்து அவர் ஒப்படைத்தனர்





