ஐரோப்பாவுக்கு சென்ற அர்ச்சுனாவின் கைகளில் சிக்கிய ஆவணங்கள்: ஆயுதம் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து!
கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்ததாக நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா.
நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“ நான் ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இதன்போது எனக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன. குறித்த 323 கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்துள்ளன. அவற்றுக்குள் ஆயுதங்களே இருந்தன என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
சிஐடிக்கு அல்ல என்னை சர்வதேச பொலிசுக்கு அழைத்து சென்று விசாரித்தால்கூட பதில் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
எனவே, துறைமுகம் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுங்கள். குழுவொன்றை அமைத்து விசாரியுங்கள். என்னை ஏன் இதில் இழுக்க வேண்டும்? அவற்றுக்குள் ஆயுதங்கள்தான் இருந்தன என்பதை அச்சமின்றி குறிப்பிடுகின்றேன்.” எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டிருந்தான்.
எனினும், மேற்படி கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இருக்கவில்லை என அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





