நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த ஆவணப்படம் வெளியீடு!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமான ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
ஆவணப்படத்தின்படி, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்க்கு அருகில், நீருக்கடியில் நடவடிகைகளை மேற்கொள்ளக்கூடிய ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்த மூல நுண்ணறிவு மற்றும் இடைமறித்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி ராயல் கடற்படை உளவுத்துறை அதிகாரியால் கப்பல்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோஸ்ட் கப்பல் என அழைக்கப்படும் கப்பல் ஒன்றும், நீருக்கடியில் செயல்பாட்டை ஆதரிக்கும் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான சிபிரியாகோவ் என்ற கப்பலும், குறித்த குழாய்க்கு அருகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு ரஷ்யா, மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.