WhatsAppஇல் documents ஸ்கேனிங் – அசத்தல் வசதி விரைவில் அறிமுகம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, வாட்ஸ் அப் செயலி உள்ளேயே டாக்குமெண்ட் ஸ்கேனிங் வசதி அறிமுகம் செய்துள்ளது.
தற்போது முதல்கட்டமாக ஆப்பிள் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.
இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிற்கு பயன்படுத்த தேவையில்லை.
வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே மற்றவர்களுக்கு ஆவணங்களை அனுப்பலாம். தற்போது ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)