இலங்கையில் பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் சிறார்களிடையே நோய்கள் பரவக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாய்மார்கள் சிறார்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
தசைவலி, வாந்திபேதி, தூக்கமின்மை, அதிக தூக்க கலக்கம், மற்றும் பசியின்மை போன்றன ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், நீர் அருந்தாமல் சிறுவர்கள் பாடசாலை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும் போது, அவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடும்.
(Visited 8 times, 1 visits today)