இலங்கையில் பரவும் வைரஸ் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!
கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது. எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் இதுவரையில் 30 000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர்.
எனவே காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படும் போது உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.