தென்கொரியாவில் கூட்டாக இராஜினாமா செய்யும் மருத்துவர்கள்!
தென் கொரியாவில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் அரசாங்க மருத்துவக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாட்டின் ஐந்து பெரிய மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகள் தாமதமாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர் சேர்க்கையை 2,000 ஆக உயர்த்தும் அரசுத் திட்டத்தில் மருத்துவர்கள் குழுக்களும் அரசும் முட்டி மோதுகின்றன.
தென் கொரியாவின் வேகமாக வயதான மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு வைத்தியர்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் மருத்துவக் கட்டணத்தை உயர்த்தவும் மற்ற பிரச்சனைகளை முதலில் தீர்க்கவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் மோதல் வெடித்துள்ளது.