இலங்கையிலிருந்து அடுத்தடுத்து வெளியேறும் வைத்தியர்கள் – கடும் நெருக்கடியில் நாடு
இலங்கையிலிருந்து இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெறுதல் போன்ற காரணங்களால் இவ்வாறு வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த வருடம் 957 வைத்தியர்களை சுகாதார சேவை இழந்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ. விஜேசூரிய இதனை தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)





