ஐரோப்பா

இங்கிலாந்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த வைத்தியர்கள்!

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் அடுத்த மாதம் தொடங்கி ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக இழுப்பறியாகவுள்ள ஊதியம் தொடர்பான பிரச்சினைகளின் ஒரு பகுதியாக இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜூன் 27ஆம் திகதி காலை 7 மணி முதல் ஜூலை 2ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

ஜுலை நான்காம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே இந்த பொதுத் தேர்தலில் வைத்தியர்களின் போராட்டம் மிகப் பெரிய அளவில் தாக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது.

பயிற்சியில் உள்ள மருத்துவர்களுக்கும் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியம் தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சமீபத்தில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது.

இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!