ஜேர்மனியில் 12 பெண்களை கொலை செய்த மருத்துவர்!

ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் மீது 15 கொலைகளை செய்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
40 வயதான குறித்த மருத்துவர் காக்டெய்ல் மருந்தைப் பயன்படுத்தி தனது 15 நோயாளிகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரை அவர் 12 பெண்களையும் மூன்று ஆண்களையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வழக்கறிஞர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
ஜெர்மனியில் கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிடப்படாத மருத்துவர், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
(Visited 26 times, 1 visits today)