அறிந்திருக்க வேண்டியவை

நேர்மறை சிந்தனை என்றால் என்ன தெரியுமா?

நேர்மறை சிந்தனை (Positive thought) என்பது, ‘நல்லவை எண்ணப்படுதல்’ என்று அடிக்கடி படிக்கின்றோம், கேள்விப்படுகிறோம். முதலில் நேர்மறை சிந்தனை என்பதைப் பற்றி சரியாக நாம் புரிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

100+ Positive Life Quotes | thinking quotes about Positive - BoomSumo

பொதுவாக, நமக்கு எப்போதும் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் நடக்காது என்று நம்புவது. எது நடந்தாலும் நம்மை எதுவும் பாதிக்காது என்று நம்புவது. நம்மை விட செல்வச் செழிப்பில் கீழே இருப்பவர்களைக் கண்டு, அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்வது.

Inspirational Quotes To Keep You Motivated For Life Success, 54% OFF

இதுபோல் எண்ணுவதுதான் நேர்மறை சிந்தனை என்று நம்புகிறோம். உண்மையில் இது சரிதானா? இல்லைவே இல்லை. வெளிப்படையாகக் கூறவேண்டுமானால் எல்லோருக்கும் வெற்றி, தோல்வி உண்டு. தோல்வியே இல்லாதவர் எவரும் இல்லை. எனக்கு எதிராக எதுவும் நடக்காது. நன்மை மட்டுமே எனக்கு விளையும். நான் எப்போதும், எதையும் நேர்மறையாகவே சிந்திப்பவன் என்று வெறும் பகல் கனவுகளை மட்டும் கண்டுகொண்டு, செயல் ஏதும் செய்யாமல் இருந்தால், உறுதியாக தோல்வி மட்டுமே தொடர்ந்து வரும்.

28 Powerful Motivational Quotes To Live By This February. – InspireMore

ஒரு குழந்தை நடை பயில்கையில் எத்தனை முறை கீழே விழுகிறது. ஆனால், அது தன் முயற்சியை கைவிடுகிறதா என்றால் இல்லையே. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முயல்கிறது. முடிந்தால் அந்த குழந்தையின் முயற்சியை தடுத்துப் பாருங்கள். அவ்வளவு ஏன்? ஒரு எறும்பின் வழியில் தடையை ஏற்படுத்தி பாருங்களேன். சின்னஞ்சிறு எறும்பு, நடை பயிலும் குழந்தை இவர்களது முயற்சியில் கால் பங்கு இருந்தாலும்போதும், உலகில் எவ்வளவோ சாதனைகளைப் புரியலாம்.

Inspirational Quotes To Keep You Motivated For Life Success, 59% OFF

இதுதான் நேர்மறை சிந்தனை. வெற்றியோ, தோல்வியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்ய வேண்டியதை தொடர்ந்து முழு வீச்சுடன் செய்யுங்கள். நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்திருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம். உங்களுக்கு வெற்றி கிட்டும் வரை அயராது உழையுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்படுங்கள்.

41 Short And Powerful Quotes To Make You Feel Unstoppable | by Danny Forest  | Medium

‘என்னால் முடியும்’ என்று நம்புங்கள். பலனில் கவனம் வைக்காதீர்கள். செயலில் மட்டும் ஈடுபாட்டுடன் சிறப்பாக செயல்பட முயலுங்கள். எந்தவொரு சிந்தனையிலும், ‘இச்செயலை செய்ய முடியும். ஆனால், தடைகள் பல வரும். அதைச் சீராக்க வழிகள் பிறக்கும்’ என்கிற தெளிவு இருக்கிறதே, அதுவே நேர்மறை சிந்தனை.

நன்றி – கல்கி

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.