ஐரோப்பா

பிரித்தானியாவில் மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி எது தெரியுமா?

பிரித்தானியாவில் மக்கள் மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் இடம் குறித்து பகுப்பாய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி ஆல்டி கடந்த மாதம் மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

67 பிரபலமான மளிகைப் பொருட்களின் சராசரி கூடையின் விலை £112.90 ஆக அங்கு பதிவாகியுள்ளது.

சமீபத்திய தரவுகளின் படி பிரித்தானியாவில் ஒவ்வொரு அங்காடியிலும் ஒரு கூடை பொருட்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் வருமாறு,

ஆல்டி – £112.90
மூடி – £115.23
அஸ்டா – £126.98
டெஸ்கோ – £128.17
சைன்ஸ்பரிஸ் – £131.02
மோரிசன்ஸ் – £134.87
ஒகாடோ – £136.86
வெயிட்ரோஸ் – £144.13 ஆகிய விலைகளில் காணப்படுகிறது.

இதேவேளை பிரித்தானியாவில் உணவு விலை பணவீக்கம் 4.5% ஆக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்