பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் அருந்துகிறீர்களா? அவசர எச்சரிக்கை!
குழாய் நீரைக் குடிப்பவர்களை விட, தினசரி பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தும் நுகர்வோர் 90,000 க்கும் மேற்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அபாயங்களை நிர்வகிக்க அவசர ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை என்று ஆராய்ச்சியின் புதிய மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் சராசரியாக ஏறக்குறைய 39,000 முதல் 52,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை மக்கள் உட்கொள்கிறார்கள் என்று குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் மிதமிஞ்சிய வெப்பநிலை காரணமாக மைக்ரோபிளாஸ்டிக்கள் துகள்களாக வெளியேறுவதாக கனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவற்றை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல விளைவுகள் “கடுமையானதாக இருக்கலாம்” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
“அவசரகாலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பது நல்லது, ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல” என்று ஜர்னல் ஆஃப் ஹஸாடஸ் மெட்டீரியல்ஸில் (Journal of Hazardous Materials) வெளியிடப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





