இலங்கை செய்தி

வரிசையை மீறினால் எரிபொருள் வழங்க வேண்டாம் என உத்தரவு

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

சில சாரதிகள் வரிசையை மீறி எரிபொருள் பெற முயற்சிக்கும் போது அமைதியற்ற சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே, வரிசைக்கு புறம்பாக வருபவர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நடைபாதைகளில் நிற்பதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து சாரதிகளும் பொறுமையுடன் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதன்போது மேலும் கேட்டுக்கொண்டார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!