இந்தியா செய்தி

வாக்காளர்களை மீண்டும் சேர்க்க திமுக முடிவு: தேர்தல் பணியை முடுக்கிவிட்டது.

தமிழ்நாட்டில் இம்மாதம் 19ஆம் திகதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அதில் 85 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் 75 ஆயிரமாக உயர்த்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

வாக்காளர் நீக்கத்தின் உண்மைத் தன்மை பட்டியல் வெளியான பின்னரே தெரியும் என்றும், தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் திமுக ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களவைத் தேர்தலின்போது அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோதிலும், திமுகவின் வெற்றி குறையவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!