இந்தியா செய்தி

தமிழக இளைஞர்களை திமுக போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது – மோடி

தமிழக இளைஞர்களை திமுக அரசு போதைப் பொருள்  கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது  என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய போதே பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தங்கள் கண் முன்னால் தங்கள் குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து தாய், தந்தையரெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப் பொருள் அபாயத்தில் இருந்து நமது இளைஞர்களை நாம் மீட்டே ஆக வேண்டும்’’ என பிரதமர் மோடி பேசினார்.

‘‘2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு எனது முதல் பயணம் இது. தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு சிறப்பானதொரு ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன்.

அனைவரின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். தேசம், இந்த நாளை பராக்கிரம திருநாள் என கொண்டாடி வருகிறது.

தமிழகத்தின் பராக்கிரமம் நிறைந்த தலைவர்கள் பலர், நேதாஜியோடு தோள் சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தார்கள். வீரம் மற்றும் நாட்டுப் பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த புனித மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

மக்கள் அலைகடலெனெ இங்கே திரண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. அது, தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதுதான்.

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக – என்டிஏ அரசை விரும்புகிறது.

நாம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசின் முடிவுக் காலம் தொடங்கிவிட்டது. இதை என்னால், தெளிவாகக் காண முடிகிறது.

ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள்.

வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான்.

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும்” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!