சீனாவில் விவாகரத்து – 29 கோழிகளை பிரித்துக்கொள்ள முடியாமல் நீதிமன்றம் சென்ற தம்பதி

சீனாவில் விவாகரத்து செய்த தம்பதியிடையே, பண்ணையில் வளர்த்த 29 கோழிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கணவனும் மனைவியும் கோழிகளை பராமரிப்பதில் தாமே அதிகமாக ஈடுபட்டதாக வாதிட்டனர். இது அவர்களுக்குள் வாக்குவாதமாக மாற, விடயம் நீதிமன்றத்தை அடைந்தது.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நீதிபதி விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 28 கோழிகளை இருவருக்கும் சமமாக 14-14 எனப் பிரிக்க, எஞ்சிய ஒரு கோழியை சமைத்து பிரியாவிடை உணவாக இருவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை இருவரும் ஏற்று, நீதிபதி கூறியபடி செயல்பட்டனர். சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் நீதிபதியின் நியாயமான தீர்ப்பை பாராட்டியுள்ளனர்.
சீனாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் பதிவானதாகும். ஆனால் கோழியைப் பிரிக்க முயன்றதாலே குடும்பம் பிரிந்தது என்பது இதுவே முதல் முறையாகக் கூறப்படுகிறது.