டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (09) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மேலும் 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்ணில் புதையுண்டு காணாமல் போனவர்களது உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




