வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாவட்ட செயலாளர்

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தன அபேவிக்ரம கல்முனை பிரதேசவாசிகள் குழுவினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு களப்பயணமாக வந்த போது சுமார் மூன்று மணித்தியாலங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
வள விநியோகம் அநியாயமாக இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என மாவட்ட செயலாளர் கூறியதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
(Visited 13 times, 1 visits today)