பிரித்தானியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கை ஆரம்பம்!
பிரித்தானியாவின் புதிய கடவுச்சீட்டுக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
முன் அட்டையில் மன்னர் சார்லஸின் சின்னம் பொறிக்கப்பட்ட இந்த கடவுச்சீட்டுகள் இதுவரை தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் மிகவும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஹாலோகிராபிக் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய அம்சங்கள் உட்பட மேம்பட்ட போலி எதிர்ப்பு தொழில்நுட்பத்தை இந்த கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளன.
இதேவேளை ராணி எலிசபெத் II இன் சின்னம் கொண்ட கடவுச்சீட்டுக்கள் அவற்றின் காலாவதி திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





