இந்தியா செய்தி

போலி மிரட்டல்களால் கடும் நெருக்கடி – அமெரிக்காவின் FBI உதவியை நாடும் இந்தியா

இந்திய அரசாங்கம் போலி மிரட்டல்களால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியிருக்கிறது.

இரண்டு வாரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 400க்கும் அதிமான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதற்கும் காலிஸ்தான் கேட்கும் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது.

சமூக ஊடகத்தளங்களை வைத்துச் செய்யப்படும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களை அடையாளம் காண முயற்சித்துள்ளது.

அதற்கமைய, இந்தியாவோடு சேர்ந்து பணியாற்றுவதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு கூறியது.

அமெரிக்காவில் இருக்கும் பிரிவினைவாதி குர்பட்வாண்ட் சிங் பன்னுனை
(Gurpatwant Singh Pannun) இந்தியப் பொருளியலை முடக்கும் நோக்கத்துடன் ஏர் இந்தியாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!