பிரதான எதிர்க்கட்சிக்குள் அதிருப்தி – இந்தியப் பயணத்தில் எம்.பி.க்களை உள்வாங்காத சஜித்
கட்சி தலைவர் சஜி பிரேமதாசவின் இந்திய பயணம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
தனது புதுடெல்லி பயணத்தின்போது கட்சி எம்.பிக்களை சஜித் உள்வாங்காமை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சஜித்தின் புதுடெல்லி பயணம் அதிகாரப்பூர்வ இராஜதந்திர விஜயமா என கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு தெரியப்படுத்தப்படவும் இல்லை. ஊடக செய்திகள் ஊவாகவே நானும் அறிந்தேன்.” என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மிக முக்கிய அரசியல் புள்ளியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருதப்படுகின்றது. நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுகின்றார். குறைந்தபட்சம் அவரையாவது சஜித் உள்வாங்காமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.





