இலங்கையில் குழந்தைகளை பாதிக்கும் நோய் தொற்று – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குழந்தைகளிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை நாடு முழுவதும் அதிகரித்துவரும் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக சுகாதார நிபுணர் தினுஷா பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையானது குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் எச்சரித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மாத்திரம் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 12,198 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. இந்தநிலையில் உதவி கோருபவர்களில் 91 சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், 9 சதவீதமானவர்கள் மட்டுமே ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





