இலங்கையில் குழந்தைகளை தாக்கியுள்ள நோய் நிலைமை – வைத்தியர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சமிட்டி சமரக்கோன் தெரிவித்தார்.
மேலும், இன்று உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவர் சமிட்டி சமரக்கோன், மேற்படி தெரிவித்துள்ளார்.





