செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து கலந்துரையாடல்

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித் தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை இது செயற்படுத்தப்படமாட்டாது.

இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே போன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன

இத்தகைய திட்டம், அநீதியை ஏற்படுத்தும் என ஒரு சில நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் முறையிட்டதால், இந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 39 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி