பேரிடர் நிலை : 410 மரணங்கள் பதிவு, இலட்சக்கணக்கானோர் பரிதவிப்பு!
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 336 பேர் காணாமல் போயுள்ளதுடன், 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலையில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், கேகாலை மாவட்டத்தில் 48 பேரும், பதுளையில் 28 பேரும், குருநாகலையில் 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.




