பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும்.
“பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.




