இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பேரிடர்: 213 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் காணாமல்போனவர்களில் 213 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவரவில்லை.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (6) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கையாக 213 பட்டியலிடப்பட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

4 ஆயிரத்து 309 வீடுகள் முழமையாகவும், 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 76 ஆயிரத்து 636 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 54 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!