14 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம்(Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்கு(Pakistan) இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், டாக்காவிலிருந்து(Dhaka) கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இடையில்லா விமானங்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012 முதல், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பயணிகள் துபாய்(Dubai) மற்றும் தோஹா(Doha) போன்ற வளைகுடா மையங்கள் வழியாக இணைப்பு விமானங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
2012ம் ஆண்டில் அப்போதைய ஷேக் ஹசீனா(Sheikh Hasina) நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 2024ல் ஹசீனாவை பதவி நீக்கம் செய்து இந்தியாவுக்கு தப்பி ஓட கட்டாயப்படுத்திய போராட்டங்களை தொடர்ந்து இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.




