இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ராஜதந்திர நெருக்கடி
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ராஜதந்திர நெருக்கடி உருவாகி வருகிறது.
மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் குறித்து கூறிய கருத்துதான் இதற்குக் காரணம்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் செய்யப்பட்டனர்.
எனினும், இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு உருவாகியுள்ளதுடன், இந்தியாவுடன் பிரச்சினைகளை உருவாக்குவது மாலத்தீவை பொருளாதார ரீதியாகவும், பல துறைகளிலும் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், மாலைதீவின் சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான ஈவா அப்துல்லா இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எம்.பி.க்கள் ஒரு பிரிவினர் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த சம்பவத்திற்கு முறையாக மன்னிப்பு கேட்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.