டில்மா டீ நிறுவனர் மெரில் ஜே.பெர்னாண்டோ காலமானார்
டில்மா டீ நிறுவனர் மெரில் ஜே.பெர்னாண்டோ காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 93.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தேயிலையின் பெயரை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற தலைவர்களில் ஒருவராக மெரில் ஜே பெர்னாண்டோ கருதப்படுகிறார்.
மெரில் ஜே. பெர்னாண்டோ டில்மாவை உருவாக்கினார், இது இன்னும் உலகளவில் தேயிலை துறையில் பிரபலமான பிராண்டாக உள்ளது.
1930 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பல்லன்சேனையில் பிறந்த இவர், நாட்டில் தேயிலை ருசிகரனாக சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் ஆறு மாணவர்களில் ஒருவர்.
அதன் பின்னர், இலங்கையில் இருந்து உயர்தர தேயிலையை சர்வதேச சந்தைக்கு கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்த மெரில் ஜே பெர்னாண்டோ, 2019 வரை டில்மா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றினார்.
மறைந்த மெரில் ஜே.பெர்னாண்டோவின் பூதவுடல் இன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர்கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.