இலங்கையில் வரி செலுத்த டிஜிட்டல் நடைமுறை
இலங்கையில் வரி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இணையவழி முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முன்பதிவு தளங்கள் அதிகாரப்பூர்வ பதிவு அல்லது வரி பங்களிப்புகள் இல்லாமல் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்தமையினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள இலங்கை குழுவொன்று இந்தத் துறையில் தற்போதைய ஏகபோக உரிமையைக் குறைப்பதற்காக ஒரு தடவை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அடிப்படையிலான தளத்தையும் உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 29 times, 1 visits today)





