டிஜிட்டல் அடையாள அட்டையால் இலங்கை மக்களின் பொது பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து
இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்துக்கு எழுதிய கடிதத்தில்,
தற்போதைய ஜனாதிபதியின் இந்திய அரச சுற்றுப்பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் அதிகாரம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், இது தொடர்பிலான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் 2025 ஜனவரியில் இறுதி செய்யும் அவர் அண்மையில் கூறியதை குறித்த முன்னணி நினைவு கூர்ந்தது.
“இந்த ஒப்பந்தம் ஜனநாயக உரிமைகள், தேசிய பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, தேசத்தின் பொருளாதாரம் மற்றும் அரசு மற்றும் அதன் மக்களின் இறையாண்மைக்கு தவிர்க்க முடியாத ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஒரு இந்திய நிறுவனம் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அனுமதித்த வரலாற்றை மறு ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது”
“நாம் தகவல்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம், மேலும் ஒரு நாடு தனது மக்களின் தகவல்களையும் தரவுகளையும் மற்றொரு வெளிநாட்டு நாட்டிற்கு வழங்குவது பாரிய ஆபத்து.
ஒரு தேசம் தனது மக்களின் தகவல்களை வேறொரு நாட்டிலிருந்து பெறுவதன் மூலம் கூட அடிபணிய வைக்க முடியும். அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களைப் பெறும் அதே வேளையில், இந்திய நிறுவனத்திடம் டிஜிட்டல் அடையாள அட்டை பணியை ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்” என்றும் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.