இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோருவது சிக்கலாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21.07) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு 15,000 ரூபா கட்டணமாகவும், பரீட்சை கட்டணமாக 1,200 ரூபாவும் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் பேரவையில் அதற்கான பதில்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
பொருந்தக்கூடிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட விதம் வருமாறு,
(Visited 8 times, 1 visits today)