நம்மை கண்காணிக்கும் மூன்றாவது கண் பற்றி தெரியுமா?
நீங்கள் எப்போதாவது ஒரு நபரிடம் பேசி முடித்த பிறகு உங்களின் போனை பயன்படுத்தினால், இணையத்தில் நீங்கள் பேசியது தொடர்பான காணொளியோ அல்லது விளம்பரமோ வந்ததைப் பார்த்ததுண்டா? எனக்கு இப்படி ஒரு சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது.
ஒருமுறை எனது தங்கையிடம் குழந்தைகளுக்கான டைபர் பற்றி போனில் பேசி முடித்ததும், இணையத்தை திறந்தபோது அது சார்ந்த விளம்பரங்கள் எனக்கு வந்தது. இது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் தங்கையுடன் பேசியதை என்னுடைய ஸ்மார்ட்போன் ஓட்டுக் கேட்கிறதா? நான் டைபர் பற்றி எப்போதும் என்னுடைய ஸ்மார்ட்போனில் தேடியது கூட கிடையாது.
இது சாதாரணம் என நான் நினைத்யுதாலும், ஒருவேளை நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் மைக்ரோஃபோன் வழியாக நாம் பேசுவதையும், கேமரா வழியாக நாம் செய்வதையும் நமக்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தால் எப்படி இருக்கும்? இந்த சிந்தனை உண்மையிலேயே என்னை பயமுறுத்தியது.
தொடக்க காலத்தில் செல்போனில் வெறும் அழைப்பு மற்றும் மெசேஜ் மட்டுமே செய்து கொண்டிருந்தோம். அதை அந்த அளவுக்கு பெரிதாக எதற்கும் பயன்படுத்தியது இல்லை. ஆனால் இன்று கையில் இருக்கும் ஸ்பான்ஃபோனில் சகலமும் அடங்கிவிட்டது. இதில் நமக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது என நாம் தவிர்த்து விட முடியாது.
எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி முழுவதையும் வெளிப்படையாக பேசி விடக்கூடாது. இனிவரும் காலங்களில் இதில் AI தொழில்நுட்பமும் மேம்படுத்தப்படும் என்பதால். ஸ்மார்ட்போனை அருகில் வைத்துக் கொண்டு நாம் என்ன பேச விரும்புகிறோம் என்பதை நினைத்தால் கூட அதை எளிதாக இது கண்டுபிடித்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போனிடம் நாம் கொஞ்சம் ஒதுங்கி இருப்பது நல்லது.