ஜனாதிபதி ஹெலிகாப்டரில் கண்டி சென்றாரா?

புதிய ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்க கடந்த 23ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகவும் அங்கும் பெருமளவு வாகன பேரணி சென்றதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.
எனினும் இந்த தகவல் பொய்யானது என ஜனாதிபதி ஊடக பிரிவும் இலங்கை விமானப்படையும் விளக்கம் அளித்துள்ளது.
அன்றைய தினம் (23) ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிக்கவில்லை எனவும் அவர் பயணித்த வாகனமும் பாதுகாப்புக்காக வந்த வாகனத்தையும் தவிர வேறு எந்த வாகனமும் கண்டிப் பயணத்தின் போது பயன்படுத்தப்படவில்லை எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)