யாழில் பாயசம் வழங்கி அநுரவின் வெற்றியை கொண்டாடிய ஆதரவாளர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் இன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், பாயாசமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 39 times, 1 visits today)