டயானா தாக்கப்பட்ட விவகாரம்; அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசாரணை குழு நியமனம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) உத்தரவிட்டார்.
அதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்றமும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான விசாரணைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக்க, இமித்யாஸ் பாக்கீர் மற்றும் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)