டயானா கமகேவின் வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் வசித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





