டயனா கமகேவின் வழக்கு விசாரணை நிறைவடைந்தது – ஒக்டோபரில் தீர்ப்பு!

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனுவின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சமூக ஆர்வலர் ஓஷலா ஹேரத், டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் பிரித்தானிய குடியுரிமையை பெற்றிருந்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்த விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14.09) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
(Visited 19 times, 1 visits today)